Topic 105 of 128

மதுவை இஸ்லாம் தடைசெய்தது ஏன்?

AnswerTopic 105 of 128

இறைவன் மனிதனை பகுத்தறிவின் மூலம் ஏனைய படைப்பினங்களை விடவும் தனித்துவமானவனாக ஆக்கியுள்ளான். ஆகையால் அவன் எமது உடலுக்கும் பகுத்தறிவிற்கும் பாதிப்பை ஏற்படுத்துபவைகளை தடை செய்துள்ளான். இதனால் போதையை ஏற்படுத்தக் கூடிய அனைத்தையும் தடைசெய்துள்ளான். காரணம் அது புத்தியை மறைத்து அதில் பாதிப்பை ஏற்படுத்தி பல வகையான கேடுகளுக்கும் வழிவகுக்கும். மதுஅருந்தியவன் சிலவேளை இன்னொருவனை கொன்று விடமுடியும். சிலவேளை விபச்சாரம் செய்வான், சில வேளை களவெடுப்பான். இவ்வாறான மாபாதகச் செயல்கள் மது குடித்ததன் விளைவாக ஏற்படும்.

"நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக மது, சூதாட்டம், சிலை வணக்கம், அம்பெறிந்து குறி கேட்பது ஆகிய இவை ஷைத்தானுடைய அருவருக்கத்தக்க வேலைகளில் உள்ளவையாகும். ஆகவே, நீங்கள் வெற்றியடைவதற்காக இவற்றில் இருந்து நீங்கள் விலகிக்கொள்ளுங்கள்". (அல் மாஇதா : 90). - تقدم

பெயர் மற்றும் அதன் வடிவத்தை கருத்திற்கொள்ளாது போதையை ஏற்படுத்துவதற்கு வழிவகுப்பவை அனைத்தும் 'கம்ர்' மதூபானம் ஆகும். நபியவர்கள் கூறினார்கள் : 'போதையை ஏற்படுத்தும் அனைத்தும் மதூபானமாகும். போதையை ஏற்படுத்தும அனைத்தும் தடைசெய்யப் பட்டவைகளாகும்'. (ஆதாரம் : முஸ்லிம்). - تقدم

தனிமனிதன் மற்றும் சமூகத்திற்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக இது காணப்படுவதால் இதற்கான தடை வந்துள்ளது.

யூத, கிறிஸ்தவ மதங்களில் கூட மது தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இன்றைய காலத்தில் உள்ள பெரும்பாளானோர் இதனை ஏற்றுக் கொள்வதுமில்லை, நடைமுறைப்படுத்துவதுமில்லை.

'மதூபானம் கேலிக்குரியது, போதை பொங்கி எழுகிறது, அதன் மூலம் வழிதவறுகிறவன் ஞானி அல்ல'. (நீதிமொழிகள் 20:1). تقدم

'ஒழுக்கக்கேடும் துஷ்பிரயோகமும் நிறைந்த மதுவை அருந்திக் போதைக்குள்ளாகாதீர்கள்'. (எபேசியர் 5:18). تقدم

2010 இல் புகழ்பெற்ற மருத்துவ இதழான தி லான்செட் (The Lancet) தனிநபர்களையும், சமூகத்தையும் அழிக்கவல்ல மிகவும் ஆபத்தமான மருந்துகள் பற்றிய ஆய்வை வெளியிட்டது. இந்த ஆய்வானது ஆல்கஹால் கலந்த பாணங்கள், ஹெரோயின், புகையிலை மற்றும் ஏனைய பொருட்கள் உள்ளடங்களாக 20 பொருட்களை அடிப்படையாக கொண்டமைந்தது. இதனை 16 அளவுகோள்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்தனர். அவற்றுள் ஒன்பது அளவுகோள்கள் தனிநபருக்கு தீங்கு விளைவிப்பது தொடர்பானதாகவும், ஏழு அளவுகோல்கள் பிறருக்கு தீங்கு விளைவிப்பது தொடர்பானதாகவும் அமைந்திருந்தது. இந்த மதிப்பீட்டுக்கான புள்ளி 100 என்ற அளவில் வழங்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டது.

இறுதியில் இந்த ஆய்வு பின்வரும் முடிவை வெளியிட்டது. அதாவது தனிநபருக்கு ஏற்படும் தீங்கு மற்றும் பிறருக்கு ஏற்படும் தீங்கு இரண்டையும் ஒன்றாக கருத்திற் கொண்டால், போதைப் பொருட்களில் ஆல்கஹாலே எல்லாவற்றிலும் மிகவும் தீங்குகள் நிறைந்தததாகவும், தீங்கு விளைவிப்பதில் முதலிடத்தில் உள்ளதாகவும் குறிப்பிடுகிறது.

மற்றொரு ஆய்வு அல்கஹோலின் பாதுகாப்பான நுகர்வு விகிதம் பற்றி குறிப்பிடுகிறது. குறித்த ஆய்வானது :

மது அருந்துவதால் ஏற்படும் நோய்கள் மற்றும் காயங்களினால் ஏற்படும் உயிரிழப்பைத் தவிர்க்க மதுவின் பாதுகாப்பான நுகர்வு விகிதம் பூஜ்யமாகும் என குறிப்பிடுகின்றனர். அதாவது இதனை முழுமையாக தவிர்ப்பதே இவ்வாறான பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான ஓரே வழி என புகழ்பெற்ற அறிவியல் இதழான தி லான்செட்டின் இணையதளத்தில் ஆராய்ச்சியாளர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். இதுவரையில் இந்த விவகாரம் தொடர்பான மிகப்பெரும் தரவு பகுப்பாய்வு இடம்பெற்றுள்ளது. மது அருந்துதல் மற்றும் உட்கொள்ளும் அளவு (694 தகவல் ஆதாரங்களைப் பயன்படுத்தி) யும் மற்றும் இதனை பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நல கேடுகள் மற்றும் அபாயங்களை மதிப்பிடுவதற்கு ஆல்கஹால் தொடர்புடைய (நோய்க்கு முந்தைய மற்றும் பிந்தைய 592ஆய்வுகளில் இருந்து பெறப்பட்ட முடிவுகளின் படியும்) இதற்கென 1990 முதல் 2016 வரையிலான காலப்பகுதியில்,195 நாடுகளைச் சேர்ந்த 28 மில்லியன் மக்களை உள்ளடக்கி இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வின் படி உலகளவில் ஆண்டுக்கு 2.8 மில்லியன் மக்களின் மரணத்திற்கு மது காரணமாகிறது என்று இவ்வாய்வு முடிவுகள் வெளிப்படுத்தின.

இந்த வகையில், சந்தையில் மதுபானம் இருப்பதைக் கட்டுப்படுத்தவும், மதுபானத்தின் மீது வரிகளை விதிக்கவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்தனர். இந்த நடவடிக்கையானது எதிர்காலத்தில் மது கிடைப்பதைத் தடுப்பதற்கான முன்ஆயத்த நடவடிக்கையாக அமையலாம் என்று அபிப்பிராயப்படுகின்றனர். இதன் விளைவுகளை அறிந்த படைப்பாளனாகிய அல்லாஹ் மதுவை தடுத்ததன் மூலம் மிகவும் சிறந்த வழிகாட்டியாகவும் தீர்ப்பாளனாகவும் உள்ளான் என்பதை நாம் அறிய வேண்டும். அல்லாஹ் தீர்ப்பளிப்பதில் மிகவும் சிறந்தவன்; என்று பின்வரும் வசனத்தில் குறிப்பிடுகிறான் :

"தீர்ப்பளிப்பவர்களில் எல்லாம், அல்லாஹ் மிக மேலான நீதிபதியல்லவா?". (அத்தீன்: 8). تقدم

PDF
Ready for a harder challenge?The quiz is advanced and needs broader knowledge.
Advanced quiz