[26:137]

மேலும், நாங்கள் வேதனை செய்யப் படவும் மாட்டோம்."

[26:138]

(இவ்வாறு கூறி) அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்; ஆதலின் நாம் அவர்களை அழித்தோம்; நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.

[26:139]

நிச்சயமாக உம்முடைய இறைவன் (யாவரையும்) மிகைப்பவனாகவும், கிருபையுள்ளவனாகவும் இருக்கின்றான்.

[26:140]

ஸமூது (கூட்டத்தாரும் இறை) தூதர்களைப் பொய்ப்பித்தனர்.

[26:141]

அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் ஸாலிஹ்; "நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?" எனக் கூறியபோது

[26:142]

நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதன் ஆவேன்.

[26:143]

ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கும் வழிப்படுங்கள்.

[26:144]

மேலும், இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது.

[26:145]

இங்குள்ள (சுகபோகத்)தில், நீங்கள் அச்சந்தீர்ந்தவர்களாக விட்டு வைக்கப்படுவீர்களா?

[26:146]

தோட்டங்களிலும், நீரூற்றுக்களிலும்-

[26:147]

வேளாண்மைகளிலும், மிருதுவான குலைகளையுடைய பேரீச்ச மரங்களிலும்,

[26:148]

மேலும், ஆணவம் கொண்டவர்களாக நீங்கள் மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொள்கிறீர்களே! (இவற்றிலெல்லாம் அச்சந்தீர்ந்தவர்களாக விட்டுவைக்கப்படுவீர்காளா?)

[26:149]

ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சங்கள்; எனக்கும் வழிப்படுங்கள்.

[26:150]

இன்னும், நீங்கள், வரம்பு மீறியோரின் கட்டளைக்கு வழிப்படாதீர்கள்.

[26:151]

அவர்கள் பூமியில் குழப்பம் உண்டாக்குவார்கள்; நன்மை செய்ய மாட்டார்கள்" என்றுங் கூறினார்).

[26:152]

அதற்கு அவர்கள்; "நிச்சயமாக நீர் மிகுதம் சூனியம் செய்யப்பட்டவராக இருக்கின்றீர்" என்று சொன்னார்கள்.

[26:153]

நீரும் எங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி (வேறு) இல்லை எனவே, நீர் உண்மை சொல்பவராக இருந்தால் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வாரும் (என்றனர்).

[26:154]

அவர் சொன்னார்; "இதோ (அத்தாட்சியாக) ஒரு பெண் ஒட்டகம்! (கிணற்றிலிருந்து) அதற்கு (ஒரு நாள்) தண்ணீர் குடிப்புண்டு உங்களுக்கும் குறிப்படப்பட்ட ஒரு நாளில் தண்ணீர் அருந்தும் முறை வரும்."

[26:155]

இன்னும், அ(வ்வொட்டகத்)தை எவ்விதத் தீங்கைக் கொண்டும் நீங்கள் தீண்டாதீர்கள்; அவ்விதமாக(க எதுவும் செய்வீர்களா)யின், கடினமான ஒரு நாளின் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்.

[26:156]

அவர்கள் அதன் கால் நரம்பதை; துண்டித்து (கொன்று) விட்டனர். அதனால் அவர்கள் கைசேதப்பட்டவர்களாகவே ஆகிவிட்டார்கள்.

[26:157]

ஆகவே, வேதனை அவர்களைப் பிடித்துக் கொண்டது - நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது - எனினும், அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.

[26:158]

மேலும், நிச்சயமாக உம்முடைய இறைவன் (யாவரையும்) மிகைப்பவனாகவும், கிருபையுள்ளவனாகவும் இருக்கின்றான்.

[26:159]

லூத்துடைய சமூகத்தாரும் (இறை) தூதர்களைப் பொய்ப்பித்தனர்.